புயல் கூட
நீ வரும் வீதியில்
ஒதுங்கிக் கொண்டு
தென்றலை அனுப்புகிறது....
நீ வரும் வீதியில்
VB2010, ஞாயிறு, 24 ஜூலை, 2011மரணம்...
VB2010,தினமும் மரணம்...
என் தலையில் நீ எழுதியது...இறைவா..
இன்று யாரால்...எப்பொழுது... ஏன்...
தெரிந்தால்...நிம்மதியாய்
மீண்டும் உயிர் விடுவேன்....
பூக்கள்
VB2010,உனக்காக என்றால்
தற்கொலை படையாக மாறி
என் கையில் வந்து
சிரித்துக்கொண்டே மரிக்கிறது பூக்கள்...
இன்று புதிதாய் ஒரு உலகம்....
VB2010, ஞாயிறு, 17 ஜூலை, 2011தூறல்
VB2010,உனக்கே என்னை புரியாதபோது
என்னை
எனக்கு எப்படி புரியும்....
என்னுடன் நான் இருந்தகாலம்
அதிகமிருக்கலாம்..... ஆனால்
என்னுள் நீ இருந்த காலம் அதிகம்....
ஓவ்வொரு முறையும் அவதாரம்
எடுக்க
நான் கடவுளும் இல்லை...நீ பக்த்தையும் இல்லை...
தூறல் வானிலிருந்து மட்டுமல்ல
கண்களிலிருந்தும் வரும்.....
அடை மழைக்கு முன் அரவணைத்துவிடு....
Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை
VB2010, வியாழன், 20 மே, 2010இத்தனை நாளும் தொலைக்காட்சியில் "Breaking News" பார்த்ததற்கும் இனிமேல் நான் பார்க்கபோகும் "Breaking News" -க்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கும். காரணம் - Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை).
எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-2 (விடையை சரி பார்த்தல்)
VB2010, திங்கள், 7 டிசம்பர், 2009போன பதிவில் எப்படி பெருக்குவது என்று பார்த்தோம். இப்போ நாம் செய்து முடித்த கணக்கு சரிதானா என்பதை சுலபமா எப்படி சரி பார்ப்பது என்பதை பார்க்க போகிறோம்.
eg. 12 x 14 = 168 இதை எப்படி சரி பார்ப்பது?…
இந்த கணக்கை மூன்று பகுதியாக பிரிக்க போகிறோம்.
1.அதாவது நம்ம கணக்கில் முதல் எண் 12. இப்போ இதை 1+2 என்று கூட்டிக்கொள்ள வேண்டும். அப்போ 3 விடை.
2. இப்போ இரண்டாவது எண். 14. அதையும் 1+4 = 5 என்று கூட்டிக் கொள்வோம்.
இப்போ முதலில் உள்ள விடையையும் இரண்டாவது உள்ள விடையையும் பெருக்கவும். 3 x 5 = 15 . இதுவும் இரண்டு இலக்கமாக வருவதல் இதையும் பக்கவாட்டில் கூட்டவும் ( 1 + 5 = 6) இப்போ நம்ம விடை 6.
3. இப்போ நம்ம கணக்கின் மூன்றாவது பகுதி… 1 + 6 + 8 = 15 . விடை இரண்டு இலக்கமாக இருப்பதால் மீண்டும் 1 + 5 = 6
முதல் விடையும் இரண்டவது விடையும் ஒரே மாதிரி வந்தால் நம்ம கணக்கு சரி…………….
தொடரும்….