எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-2 (விடையை சரி பார்த்தல்)

போன பதிவில் எப்படி பெருக்குவது என்று பார்த்தோம்.  இப்போ நாம் செய்து முடித்த கணக்கு சரிதானா என்பதை சுலபமா எப்படி சரி பார்ப்பது என்பதை பார்க்க போகிறோம்.

eg.  12  x 14 = 168    இதை எப்படி சரி பார்ப்பது?…

இந்த கணக்கை மூன்று பகுதியாக பிரிக்க போகிறோம். 

1.அதாவது நம்ம கணக்கில் முதல் எண் 12. இப்போ இதை 1+2 என்று கூட்டிக்கொள்ள வேண்டும். அப்போ 3 விடை.

2. இப்போ இரண்டாவது எண். 14. அதையும் 1+4 = 5 என்று கூட்டிக் கொள்வோம்.

இப்போ முதலில் உள்ள விடையையும் இரண்டாவது உள்ள விடையையும் பெருக்கவும். 3 x 5 = 15 . இதுவும் இரண்டு இலக்கமாக வருவதல் இதையும் பக்கவாட்டில் கூட்டவும் ( 1 + 5 = 6)  இப்போ நம்ம விடை 6.

3. இப்போ நம்ம கணக்கின் மூன்றாவது பகுதி… 1 + 6 + 8 = 15 . விடை இரண்டு இலக்கமாக இருப்பதால் மீண்டும் 1 + 5 = 6

முதல் விடையும் இரண்டவது விடையும் ஒரே மாதிரி வந்தால் நம்ம கணக்கு சரி…………….

தொடரும்….

எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-1

இது சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து …  அது ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் படுத்தியிருக்கிறேன்.

image

இதை பெருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் இந்த இரண்டு எண்களையும் 10 ஆக்க என்ன வேண்டும் என்பதை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.  அப்படி கணக்கிட்டால் இப்படி வரும்.

image

இப்போழுது இந்த இரண்டில் ஏதாவது ஒரு எண்ணை குறுக்கே கழிக்கவும். (8-4=4 or 6-2=4)

image

அப்படி கழிக்கும் போது வரும் எந்தான் விடையின் முதல் எண்.  இனி கீழே உள்ள எண்களை பெருக்கி போட்டால் நமது விடை கிடைத்து விடும். அதாவது (2 X 4 =8)

image

இன்னொரு உதாரணம் பார்ப்போமா?

image

image

image

image

இதை பெருக்க எதற்கு இத்தனை சிரமம்.. வாய்பாடு தெரிந்தால் போதுமேன்னு நினைக்கிறீர்களா?… உங்களுக்கு விடை தொடர்கிறது…

இப்போ , இதை பெருக்க வேண்டும்…

image

இப்போ முதலில் 10 போட்ட இடத்தில் 100 போட்டால் போதும்.. உங்கள் விடை ரெடி.

image

தொடரும்….

தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்கள் PDF வடிவில்....இங்கு தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது. உங்களுக்கு அருகில் யாராவது ஏழைகள் இருந்தால் இதை பிரிண்ட் செய்து கொடுக்கவும்.. அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளது...

இணையத்தில் எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்....


1.
கிழே உள்ள லிங்கில் ரைட் கிளிக் செய்யவும் ...

எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்....

 

2. இங்கே "Add to Favorites" கிளிக் செய்யவும்

 

Adding bookmarklet to favorites in IE

3. இப்போ கிளிக் "Yes" ..

IE security message for Javascript: URL

 

4. இப்போ எங்கே ஸ்டோர் செய்ய என்பதை செலக்ட் செய்யவும்.

 

 

Selecting Links folder for bookmarklet

 

5. இப்போ "ADD" என்பதை கிளிக் செய்யவும்.

 

6. இனி உங்களுக்கு தேவையான இடத்தில் போய் (உ.தா.www.yahoo.com) search box இல் கிளிக் செய்துவிட்டு favorites இல் இப்போ நாம் சேவ் செய்த லிங்க் கிளிக் செய்யுங்கள். இப்போ உங்களால் அங்கே தமிழில் டைப் செய்ய முடியும்...

 

 

Tips&Tricks

குறிப்பிட்ட வெப் சைட்டில் தேடல் :-

 

இப்போ உங்களுக்கு bbc வெப்சைட்டில் சோனியா காந்தி பற்றி என்னவெல்லாம் செய்திகள் வந்துள்ளது என்பதை பார்க்க ...

sonia gandhi site:bbc.com

 

இது அந்த குறிப்பிட்ட BBC இணைய தளம் முழுவதையும் தேடி சோனியா பற்றிய செய்திகளை மட்டும் தரும்.

 

குறிப்பிட்ட வார்த்தைகள் தவிர..... தேடல்.....

 

இப்போ நமக்கு எதாவது தேடனும் ஆனால் குறிப்பிட்ட வார்த்தைகள் வரக்கூடாது என்றால் அதை - என்ற அடையாளம் கொடுத்து தேடலாம்..

sonia gandhi -italy

 

 

Tips & Tricks

Google - சில டிப்ஸ் ....

 

(நிறைய பேருக்கு இது தெரிந்திருக்கும்... இருந்தாலும் இது தெரியாதவர்களுக்காக...)

 

Search Tips :

இப்போ அப்துல் கலாம் பற்றி ஏதாவது தேட வேண்டியது இருக்கு என்று வைத்துக்கொள்வோம் ... சாதரணமாக நீங்கள் செய்வது ABDUL KALAM என்று கொடுத்து தேடுவீர்கள். இப்படி கொடுத்தால் 1,030,000 பக்கங்கள் ரிசல்ட் ஆக வரும். கொஞ்சம் யோசித்து பாருங்கள். உங்களுக்கு தேவையான தகவலை பெற நீங்கள் 1,030,000 பக்கங்களை பார்க்க வேண்டும். ஏன் இப்படி..?

 

ABDUL KALAM என்று கொடுத்தால் கூகிள் யாஹூ எல்லாமே ABDUL என்றும் KALAM  என்றும் இருக்கும் எல்ல பக்கங்களையுமே காட்டும். அதாவது அப்துல் காதர் , அப்துல் மாலிக் , அப்துல் முதலேப் இப்படி எல்ல பெயர்களையுமே காட்டும். அதே போல் முஹம்மது கலாம் ,.... இப்படி கலாம் என்ற பெயரையும் காட்டும். அதனால் நமக்கு தேவையான தகவல் கூட இப்படி தேவை இல்லா தகவல்களும் வரும்.

இதை சரி செய்ய ... அல்லது சரியை தேட என்ன செய்யலாம்.....

 

இதையே டபுள் கோட் உள்ளே கொடுத்து பாருங்கள் அதாவது இப்படி... " ABDUL KALAM"

இப்போ 959,000 பக்கங்கள் மட்டுமே காட்டும்.  இதையே "president abdul kalam" என்று கொடுங்கள் .. வெறும் 25,800  பக்கங்கள் மட்டுமே காட்டும்...

 

இதையே இன்னும் குறிப்பாக உங்களுக்கு அவரோட வாழ்க்கை சரித்திரம்தான் வேணும் என்றால் "president abdul kalam biography" என்று கொடுத்து பாருங்கள்....வெறும் 479 பக்கங்களிலே உங்களுடைய தேவை நிறைவேறிவிடும்....

 

.............தொடரும் ............

 

இதுபோல இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கு... கொடுக்கலாமா? அல்லது எல்லாருக்கும் தெரியுமா?... தொடரலாமா?....