தூறல்

உனக்கே என்னை புரியாதபோது
என்னை
எனக்கு எப்படி புரியும்....

என்னுடன் நான் இருந்தகாலம்
அதிகமிருக்கலாம்..... ஆனால்
என்னுள் நீ இருந்த காலம் அதிகம்....

ஓவ்வொரு முறையும் அவதாரம்
எடுக்க
நான் கடவுளும் இல்லை...நீ பக்த்தையும் இல்லை...

தூறல் வானிலிருந்து மட்டுமல்ல
கண்களிலிருந்தும் வரும்.....

அடை மழைக்கு முன் அரவணைத்துவிடு....

Comments :

0 கருத்துகள் to “தூறல்”

கருத்துரையிடுக