Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை

இத்தனை நாளும் தொலைக்காட்சியில் "Breaking News" பார்த்ததற்கும் இனிமேல் நான் பார்க்கபோகும் "Breaking News" -க்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கும். காரணம் - Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை).

ஒவ்வொரு தற்போதைய செய்தியின் பின்னணியிலும் இதுபோன்ற ஒரு பத்திரிக்கையாளனின் செய்தியும் இருக்கிறது என்று நினைக்கும் போதே உள்ளம் பதறுகிறது. ஒவ்வொரு நிகழ்வையும் பத்திரிகை தர்மம் எனும் கண் கொண்டு பார்க்கும் கண்களுக்கு அதற்க்கு கொஞ்சம் கீழே இருக்கும் பத்திரிக்கையாளனின் இதயம் தெரியாமல் போயிருமோன்னு தோண வைக்கிறது..

கதை.... மரண தருவாயில் இருக்கும் கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளனின் வீட்டின் முன் கூடியிருக்கும் பத்திரிகை நிருபர்களின் ஒருவனின் வாழ்க்கை. அதுவும் அந்த எழுத்தாளனுடன் சின்ன வயதின் ஒரு பருவத்தை அவருடன் கழித்து அந்த உந்துதலில் பத்திரிக்கையாளனாய் ஆனா ஒருவனின் கதை.

இன்னும் நிறைய எழுதனும்னு ஆசை ... படத்தை பற்றி... ஆனால் வேண்டாம் ... படம் பாருங்கள்...

Comments :

0 கருத்துகள் to “Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை”

கருத்துரையிடுக