புயல் கூட
நீ வரும் வீதியில்
ஒதுங்கிக் கொண்டு
தென்றலை அனுப்புகிறது....
நீ வரும் வீதியில்
VB2010, ஞாயிறு, 24 ஜூலை, 2011மரணம்...
VB2010,தினமும் மரணம்...
என் தலையில் நீ எழுதியது...இறைவா..
இன்று யாரால்...எப்பொழுது... ஏன்...
தெரிந்தால்...நிம்மதியாய்
மீண்டும் உயிர் விடுவேன்....
பூக்கள்
VB2010,உனக்காக என்றால்
தற்கொலை படையாக மாறி
என் கையில் வந்து
சிரித்துக்கொண்டே மரிக்கிறது பூக்கள்...
இன்று புதிதாய் ஒரு உலகம்....
VB2010, ஞாயிறு, 17 ஜூலை, 2011தூறல்
VB2010,உனக்கே என்னை புரியாதபோது
என்னை
எனக்கு எப்படி புரியும்....
என்னுடன் நான் இருந்தகாலம்
அதிகமிருக்கலாம்..... ஆனால்
என்னுள் நீ இருந்த காலம் அதிகம்....
ஓவ்வொரு முறையும் அவதாரம்
எடுக்க
நான் கடவுளும் இல்லை...நீ பக்த்தையும் இல்லை...
தூறல் வானிலிருந்து மட்டுமல்ல
கண்களிலிருந்தும் வரும்.....
அடை மழைக்கு முன் அரவணைத்துவிடு....
ஹை கூ ...
VB2010, செவ்வாய், 21 அக்டோபர், 2008தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதானால்தானோ என்னவோ மந்திரங்களை போலவே தந்தையின் சொல்லும் புரியாமலே போனது....
ஏழங்களாஸ் டீச்சர்...
VB2010, திங்கள், 6 அக்டோபர், 2008நினைவு துகள்களுக்குள்
ஒரு பயணம்...
மறக்காத .. இல்லை...இல்லை .. மறக்கமுடியாத முகமுமாய்
மறந்து போன பெயருமாய்
என் ஏழங்களாஸ் டீச்சர்...
ஒரு நாளும் ஒரு நொடியும்
எங்களை தொடாத டீச்சர் கை பிரம்பு....
உச்சி வெயிலிலும் உறங்காமல் நிழல் தந்த வேங்கை மரநிழலில்
சொல்லி தந்த வாழ்க்கை பாடம்....
புரியாத வயசு...அறியாத வயசு....
ஆனாலும்
"டேய்...டீச்சர்...நம்மளையெல்லாம் நல்லா
படிக்க வைப்பதற்காய்...கல்யாணமே
பண்ணிக்கலைடா...." - தோழன் சொன்னது
இதயம் தொட்டு
கண் வழியே நீராய் நின்றது....
அழகில்லாத முகமுமாய்...
அழகான இதயமுமாய்....நீங்கள்....
எதையுமே....எதையுமே...
மறக்க முடியாது....டீச்சர்....மறக்க முடியாது....
என்றுதான் எண்ணியிருந்தேன்... ஆனால்...
வாழ்க்கை எல்லாத்தையும் மறக்கடித்தது...
மனதை மழுங்கடித்தது...நேற்று வரை...
"டேய்... நம்ம ஏழங்களாஸ் டீச்சர்
கேன்ஸர்ல இற்ந்துட்டாங்களாம்....".....
