எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-2 (விடையை சரி பார்த்தல்)

போன பதிவில் எப்படி பெருக்குவது என்று பார்த்தோம்.  இப்போ நாம் செய்து முடித்த கணக்கு சரிதானா என்பதை சுலபமா எப்படி சரி பார்ப்பது என்பதை பார்க்க போகிறோம்.

eg.  12  x 14 = 168    இதை எப்படி சரி பார்ப்பது?…

இந்த கணக்கை மூன்று பகுதியாக பிரிக்க போகிறோம். 

1.அதாவது நம்ம கணக்கில் முதல் எண் 12. இப்போ இதை 1+2 என்று கூட்டிக்கொள்ள வேண்டும். அப்போ 3 விடை.

2. இப்போ இரண்டாவது எண். 14. அதையும் 1+4 = 5 என்று கூட்டிக் கொள்வோம்.

இப்போ முதலில் உள்ள விடையையும் இரண்டாவது உள்ள விடையையும் பெருக்கவும். 3 x 5 = 15 . இதுவும் இரண்டு இலக்கமாக வருவதல் இதையும் பக்கவாட்டில் கூட்டவும் ( 1 + 5 = 6)  இப்போ நம்ம விடை 6.

3. இப்போ நம்ம கணக்கின் மூன்றாவது பகுதி… 1 + 6 + 8 = 15 . விடை இரண்டு இலக்கமாக இருப்பதால் மீண்டும் 1 + 5 = 6

முதல் விடையும் இரண்டவது விடையும் ஒரே மாதிரி வந்தால் நம்ம கணக்கு சரி…………….

தொடரும்….

Comments :

0 கருத்துகள் to “எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-2 (விடையை சரி பார்த்தல்)”

கருத்துரையிடுக