ஏழங்களாஸ் டீச்சர்...

நினைவு துகள்களுக்குள்
ஒரு பயணம்...
மறக்காத .. இல்லை...இல்லை .. மறக்கமுடியாத முகமுமாய்
மறந்து போன பெயருமாய்
என் ஏழங்களாஸ் டீச்சர்...

ஒரு நாளும் ஒரு நொடியும்
எங்களை தொடாத டீச்சர் கை பிரம்பு....

உச்சி வெயிலிலும் உறங்காமல் நிழல் தந்த வேங்கை மரநிழலில்
சொல்லி தந்த வாழ்க்கை பாடம்....

புரியாத வயசு...அறியாத வயசு....
ஆனாலும் 
"டேய்...டீச்சர்...நம்மளையெல்லாம் நல்லா
படிக்க வைப்பதற்காய்...கல்யாணமே
பண்ணிக்கலைடா...." - தோழன் சொன்னது
இதயம் தொட்டு
கண் வழியே நீராய் நின்றது....

அழகில்லாத முகமுமாய்...
அழகான இதயமுமாய்....நீங்கள்....

எதையுமே....எதையுமே...
மறக்க முடியாது....டீச்சர்....மறக்க முடியாது....
என்றுதான் எண்ணியிருந்தேன்... ஆனால்...

வாழ்க்கை எல்லாத்தையும் மறக்கடித்தது...
மனதை மழுங்கடித்தது...நேற்று வரை...

"டேய்... நம்ம ஏழங்களாஸ் டீச்சர்
கேன்ஸர்ல இற்ந்துட்டாங்களாம்....".....

Comments :

0 கருத்துகள் to “ஏழங்களாஸ் டீச்சர்...”

கருத்துரையிடுக