அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது ......


ரொம்ப நாளைக்கு முன்னால என்னோட நண்பன் சொன்ன ஒரு சம்பவம் ... 
நண்பன் ரொம்ப முற்போக்கு சிந்தனைவாதி ... எல்லாத்தையுமே மூளையால் யோசிக்காமல் இதயத்தால் யோசிப்பவன் .... யானைக்கும் அடி சருக்கும்தனே... அப்படித்தான் சறுக்கியது...  

திருநெல்வேலியில் இருந்து மதுரையை நோக்கிய பயணம் ... இரவு 9.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கிளம்பியாச்சு... அந்த பேருந்து நாகர்கோவிலில் இருந்து சென்னையை நோக்கி போய் கொண்டிருந்தது... பேருந்தில் ஏறியாச்சு ... அருகில் ஒரு பெரியவர்... பார்த்ததுமே விவசாயி என்பது தெரிந்தது. சட்டை இல்லாமல் பழுப்பு கலரில் ஆன வெள்ளை வேஷ்டி... நாகர்கோவிலில் இருந்து வர்றார் போல... தூக்க கலக்கம் நல்லாவே தெரிந்தது.... அவருக்கு அடுத்த சீட் என்னோட நண்பனுக்கு... 

பேருந்து நிலையத்தை தாண்டியதுதான் தாமதம்... பெரியவர் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டார்.... தூக்கம் ரொம்ப கூடி ...கூடி ... நண்பர் மேலே மெதுவா சாய ஆரம்பித்துவிட்டார்... இவன் கொஞ்சம் பொறுத்து பார்த்து ... பொறுத்து பார்த்து ... மெதுவா அவர் தலையை தள்ளி விட்டிருக்கான்... மெதுவா முழிச்சி பார்த்துதுட்டு மீண்டும் அதே தூக்கம்.... ஒரு அரைமணி நேரம் பார்த்துட்டு ... இது தேறாது ,,, ரொம்ப கஷ்டமா போகவும் "தாத்தா ...தாத்தா... கொஞ்சம் நேரா உக்காருங்க ... விட்டா மடியில படுத்துருவீங்க போல இருக்கே ".. என்று எரிச்சலாய் சொல்ல அவர் தம்பி மன்னிசிக்கப்பா ... இப்போதான் வயகாட்டிலே இருந்து வந்தேன் ... என் மவ பெரிவளுக்கு உடம்புக்கு முடியலை .. இப்போ தான் போன்வந்தது..அதன் பதறி அடிச்சிகிட்டு ஓடிவந்தேன் ... மன்னிசிக்கப்பா ... 
சரி ... சரி... பரவாஇல்லை ... இனிமே சாயாமல் நேரா தூங்குங்க ... நண்பன் ஆனால் அவர் துங்க வில்லை... கண்களில் என்னலாமோ சிந்தனை தெரிந்தது ... அனாலும் இவனுக்கு ஒன்னும் தோணலை ...  

நேரம் ஆக ஆக நண்பனுக்கு தூக்கம் வந்திருக்கு ... தலைவரும் நல்லா தூங்கிட்டாரு.. நேரம் நேரம் ஆக ஆக ... இவன் கொஞ்சம் கொஞ்சமா அவர் மேலே சாய ஆரம்பிச்சிருக்கான் .. கொஞ்சம் உணர்வு வர ... அவர்ட்ட சாரின்னு சொல்லிடு மீண்டும் தூங்கியிருக்கான் ... மீண்டும் மீண்டும் தூக்கம் வந்து தூங்க கொஞ்ச நேரத்தில் அவர் மெதுவா இவன் தலையை தூக்குவது தெரிந்தது. முழித்தும் முழிக்க முடியாமலும் இருக்கும்போது அவர் மெதுவா அவர் தலையில் இருந்த துண்டை அவிழ்த்து செம்மாடு(துண்டை ரவுண்டா சுத்தி தலைக்கு வைத்து படுக்க தலையணை மாதிரி இருக்கும் ) கட்டி நெஞ்சில் வைத்து அவன் தலையை அதில் வைத்திருக்கிறார்.அப்போதான் அவனுக்கே தெரிந்தது அவன் படுதிடுந்த அந்த நெஞ்சில் நெஞ்சு எலும்பு தூக்கி கொண்டிருந்தது ... அவனுக்கு படுக்க இடைஞ்சலாய் இருந்தது .... அதற்கு அப்புறம் அவன் தூங்கவில்லை ... ஆனால் அந்த நெஞ்சில் இருந்து தலையை எடுக்கவும் இல்லை...  

அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது ......

Comments :

8 கருத்துகள் to “அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது ......”
பரிசல்காரன் சொன்னது…
on 

நல்ல கதை நண்பரே! சபாஷ்!

தொடர்ந்து எழுதுங்கள்...!

பரிசல்காரன் சொன்னது…
on 

settings>comments> போய் word verification ஐ எடுத்துடுங்க. இல்லீன்னா பின்னூட்டமே வராது!

Unknown சொன்னது…
on 

Its toooo good....my friend

VB2010 சொன்னது…
on 

Thank You aaaa. Thanks for your comment. I will boost my writing habit

பெயரில்லா சொன்னது…
on 

அருமையான் கதை. மனித நேயம் என்றால் என்ன என்பதை புரிய வைத்த கதை. நடை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

VB2010 சொன்னது…
on 

ரொம்ப நன்றி ராகவன்.

VB2010 சொன்னது…
on 

இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல விரும்புவது பரிசல்காரனுக்கும் , அதிஷாவுக்கும்தான். சும்மா பெயருக்கு ஒரு வலைப்பூவை பதிந்து வைத்துக்கிட்டு எதுவுமே எழுதாமல் இருந்த என்னை எழுத தூண்டியவரிகள் இவர்களுடையது. .. நன்றி....நன்றி...

ஆட்காட்டி சொன்னது…
on 

)))

கருத்துரையிடுக