1995, Bsc. Result Day
திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பஸ் பிடித்து Science Center Stop-இல் வந்து இறங்கும் போது எனக்கு B.Sc. ரிசல்ட் பார்க்க போற எந்த பதட்டமும் இல்லை.
பேருந்திலிருந்து இறங்கும் போது குலாம் (என் தோழன்) பார்த்தேன் ... என்னை பார்த்ததும் கண்கள் சிவக்க அழுதுவிட்டான் ... என்ன ஆச்சு குலாம் பாய் ... விடுங்க ... எக்ஸாம் result தானே ... வாழ்க்கையோட result இல்லையே.... விடுங்க விடுங்க.... சொல்லியும் விடாமல் அழுதுகொண்டிருந்தான் ...
குலாம் ... என்னோட விடுதியில் ரூம் மேட் ... ரொம்ப நல்லா படிக்ககுடியவன். அவனே அழுதுகிட்டு இருக்கான்... அப்போ நான் ... எனக்கு நினைக்கையிலே கொஞ்சம் பயம் வந்தது... சரி .. விடுங்க ... குலாம் ... எடுத்து எழுதிடலாம்....
எந்த பேப்பர் போயிருக்கு? கேக்கவும் சிஸ்டம் அனலிசிஸ் ... சொல்லி மீண்டும் கண்கள் கலங்க நின்றிருந்தான் ...
ஏன் உங்க வீட்டில் சத்தம் போடுவாங்களா? - நான்
இல்லை சூர்யா ... நான் எல்லாம் பாஸ் ஆயிட்டேன்...வழக்கம்போல அதே 85-90%. உனக்குதான் சிஸ்டம் அனலிசிஸ் போயிருக்கு.... - குலாம்
என்னது..... எனக்கு ஒரே ஒரு பேப்பர்தான் போயிருக்கா? எனக்கு ரொம்ப சந்தோசம் .... 14 paper எழுதி ஒன்னே ஒன்னுதான் போயிருக்கா..... என்ன குலாம் பாய்.... நான் பெயில் ஆனதுக்கா அழுறீங்க? .... குலாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... நான் அந்த பேப்பர் எப்படியும் அடுத்த செமஸ்டர்ல எடுத்துருவேன்னு சொல்லி சமாதனப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்....
2008,Today
இப்போ நான் Saudi Arabia - வில் ஒரு கம்பென்யில் System Analysist .
கரெக்ட் .. நீங்க மனசுக்குள்ளே நினைக்கிறது எனக்கு கேக்குது.....
Yes.குலாம் என்ன பண்றாருன்னு தானே கேக்குறீங்க?
அவர் கடையநல்லூரில் மரக்கடை வைத்திருக்கிறார்.
Comments :
கருத்துரையிடுக