ஆத்தா செப்பு குடமெடுத்து
ஆத்துக்கு போனா தண்ணி கொண்டார சாயங்காலம் ஆவும்.....
இப்போ குழாயை திருப்புனா தண்ணி......
ஐயன் வண்டி கட்டி சந்தைக்கு போனா
மத்த நாள் ராவைக்குதான் வுட்டுக்கு வருவாரு....
இப்போ காலையில 5.30 வண்டியை பிடிச்சி போயிட்டு
ராவுல சாப்பிட வீட்ல இருக்காவ...
பஞ்சாயத்து ரேடியோல செய்தி கேக்க
தாத்தா சாயங்காலம் 4.00 மணிக்கே காத்து கிடப்பாவ ...
இப்போ உலக செய்தி எல்லாம் தாத்தாகிட்டேதான் கேக்கணும்...
எல்லாமே எல்லாமே .. மாறிட்டு ... ஆனா ... ஆனா...
கலாங்கரை குப்பன் மவனும் கீழ தெரு நாடார் மவளும்
காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டப்போ
அப்போ வந்த அதே சாதி கலவரம் இப்போவும்.......
appo nadar-gal ellam jathi veriyar entru solla varengala????????????????
மீண்டும் ஒரு கண்டன பின்னூட்டம் ...
தோழர் திராவிடன் அவர்களே... யாரையும் குறிப்பிட்டு தாக்கும் எண்ணம் இல்லை.... எங்க ஊரில் நடந்ததைத்தான் எழுதியருக்கிறேன்.
திராவிடன், தனக்குக் கீழ தான் அடக்கி ஆள ஒரு ஜாதி இருக்கனும்னு நெனைக்கிற எல்லாருமே ஜாதி வெறியர்கள் தான்.