போகிற போக்கில்

போகிற போக்கில் .... நம்ம பசங்க போகிற போக்கில் அடிச்சி விட்டுட்டு போற சில சின்ன சின்ன ஜோக்ஸ்.....

Joke Number 1:
பசங்க எல்லாரும் சேர்ந்து குற்றாலத்திற்கு போயிருந்தோம்... கல்யாணி (கல்யாண சுந்தரம்) ஒரு பிளாட்பாரம் கடையில போய்
"தாத்தா ... வாழைபழம் வேணும்.... எவ்ளோ?"
ஒரு பழம் 50 பைசா தம்பி......
என்ன தாத்தா ... இம்பூட்டு சொல்றீங்க? ரூவாய்க்கு ரெண்டுன்னு .. எங்க ஊரில் சிரளியுது.... நீங்க யானை விலை சொல்றீங்க?....
அப்போ அவர் அவனை பார்த்த பார்வையை பாக்கனுமே?....

Joke Number 2:
எட்டாங்கிளாஸ் படிச்சிகிட்டு இருக்கும்போது.... கேம்ஸ் கிளாஸ்.... எங்க P.T. வாத்தியாருக்கு எப்பவுமே ஒலிம்பிக்ஸ் ட்ரைனிங் கொடுக்கிறோம்னு நினைப்பு.... அன்னைக்கு ரன்னிங் ரேஸ் காக சொல்லி கொடுத்துகிட்டு இருந்தார்.
எல்லாரும் வருசையா நில்லுங்க.... "
On Your Mark "
இப்போ மெதுவா வலது காலை முன்னால ஒரு ஸ்டெப் வைச்சி உக்காருங்க.... எல்லாரும் உக்காந்தோம்...
" Get Ready , Steady "
இப்போ மெதுவா தலையை மேலே தூக்கி ஒரு 3 மீட்டர் தூரம் பாருங்க... நான் "Go" சொன்னதும் ஓட ஆரம்பித்து விடலாம்னு..
சொல்லிக்கிட்டு இருக்கும்போதே பீட்டர் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சான். வாத்தியாருக்கு வந்தது கோவம்.
ஏன்டா ... ஏன்டா... ஏன் சிரிக்கிற ... கேக்க கேக்க .. இன்னும் அதிகமா சிரிச்சிகிட்டு இருந்தான். அவர் இன்னும் கோவப்பட்டு இப்போ சிரிக்கிறதை நிப்பாட்ட போறியா..இல்லையான்னு கத்தவும் நிறுத்தினான்....

அப்புறம் அவர் ஏன்டா சிரிச்சே.... இல்லை சார்... "Get Ready, Steady" சொன்னதும் மெதுவா தலையை தூக்கி 3 மீட்டர் தூரம் பார்க்க சொன்னேங்கள்ள... இந்த சுப்பையா 3.8 மீட்டர் தூரம் பார்த்துட்டான் சார்...

இன்னைக்கும் இதை எழுதும்போதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் தான் எழுதுகிறேன்...

Joke Number 3.
கட்டை ராதா.. எங்க கூட ரெண்டு ராதாகிருஷ்ணன் படிச்சாங்க.. அதனால் ஒருத்தன் பெயர் கட்டை ராதா..இன்னொருத்தன் நெட்டை ராதா... கட்டை ராதா ரொம்ப ஜாலியான பேர்வழி... ஆனால் ரொம்ப பொறுப்பானவன்.
இப்படித்தான் ஒரு ஞாயிற்றுகிழமை காலையில் அவனோட அம்மா "டேய் ராதா ரெண்டு தேங்கா சில்லு வாங்கிட்டு வாடான்னு 80 பைசா கொடுத்திருக்காங்க.... இவனும் தேங்கா வாங்க பஸ்ஸ்டாண்டிற்கு வரவும் அங்கே என்னோட இன்னொரு நண்பன் திருநெல்வேலிக்கு 10.30 மார்னிங் ஷோ வுக்கு கிளம்பி வந்திருக்கான்.
அவன் இவன்ட்டே மாப்ஸ்.. படத்துக்கு போறேன் வரியா... ன்னு கேக்கவும் தலைவர் எஸ்கேப்.... படத்துக்கு போயாச்சி... திருநெல்வேலி வரை வந்துட்டு ஒரு படத்தோட போகவா... மதியம் 2.30 நூன் ஷோவும் பார்த்துட்டு தலைவர் வீட்டுக்கு போயிருக்கார்...எப்போ ...? ராத்திரி 7.30 மணிக்கு....ராத்திரி வீட்டுக்கு போனவன் சும்மா இருந்த்திருந்தால் கூட அவங்க அம்மாவுக்கு கோவம் வந்திருக்காது... நேரா அவங்க அம்மாகிட்டே போய் ... "அம்மா இந்த தேங்கா சில்லுன்னு " கொடுத்திருக்கான்... அன்னைக்கு அவனுக்கு விழுந்த ஏச்சுக்கு ஈடு இணையே கிடையாது...

Comments :

2 கருத்துகள் to “போகிற போக்கில்”
பார்சா குமார‌ன் சொன்னது…
on 

super jokes

வெள்ளை நிலா சொன்னது…
on 

நன்றி திரு குமாரன் அவர்களே ...

கருத்துரையிடுக