மைக்ரோசாப்ட்-டும் திருநெல்வேலியும் பின்னே நானும்....

ரெண்டு வருசத்துக்கு முன்னால ஒரு இனிய மாலை பொழுதில் ராமகிருஷ்ணன் சாரை பரணி ஹோட்டல் முன்னால பார்த்தேன். சாரை பார்த்து பேசிகிட்டு இருந்தேன்... அப்போ பக்கத்திலே ஒரு நண்பர் நின்னுகிட்டு இருந்தார். சா

ரும் என்னோட வேலையை பத்தி கேட்டுகிட்டு இருந்தாங்க... நமக்குதான் யாராவது ஆள் கிடைத்தா போதுமே.... கம்ப்யூட்டரில் அப்படி பண்ணலாம் இப்படி பண்ணலாம்னு ரொம்ப பேசிகிட்டே இருந்தேன்... பக்கத்தில் இருந்தவரும் அமைதியா கேட்டுகிட்டே இருந்தார். அன்னைக்கு நான் ஏதோ சாதிச்சிட்ட மாதிரி சார்கிட்டே ஒரு 1 மணி நேரம் பேசிகிட்டு இருந்தேன். எல்லாம் கம்ப்யூட்டர் பத்திதான் .

அவ்வளவு நேரம் பேசி முடிச்சிட்டு சார்ட்ட
"இது யார் சார் னு கேட்டதுதான் தாமதம்.."
இவரை தெரியாதா? இவர்தான் மகேஷ்.. - சார்
இல்லையே ... தெரியாதே... சொல்லவும்
என்னா தம்பி, கம்ப்யூட்டர் துறையில் இருக்கீங்க? நம்ம ஆள்களை தெரிந்து வைத்து கொள்ள வேண்டாமா?... இவர் உங்க துறையில் நிறையா சாதனை செய்திருக்கிறார்.. நம்ம நெல்லையை சேர்ந்தவர்.... அதான் மைக்ரோசாப்ட் கம்பனிக்கு கூட ஏதோ ப்ரோக்ரம்லாம் பண்ணி கொடுத்திருக்கிறார்...
என்னது மைக்ரோசாப்ட் - க்கா...
ஆஹா அதிகமா பேசிட்டோமோன்னு அப்போதான் தோணிச்சு ....
அதான் சொல்வாங்க ... "நிறை குடம் தழும்பாது.... அறை குறைதான் அதிகமா அலம்பும் புலம்பும்னு .."

2006071416510101
அந்த தமிழனை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன்..

கிளிக் ஹியர் :

Comments :

2 கருத்துகள் to “மைக்ரோசாப்ட்-டும் திருநெல்வேலியும் பின்னே நானும்....”
muppi சொன்னது…
on 

மைக்ரோசாப்டும் நானும் கட்டுரையில் மகேஷ் என குறிப்பிட்டிருக்கும் நபர் நாங்குநேரியில் உள்ள கல்லூரியில் பயின்றவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். படத்தில் சிரித்தபடி போஸ் கொடுப்பவர் நெல்லை பல்கலையில் ஒரு துறை பேராசிரியராக இருந்துகொண்டு அமெரிக்காவில் ஒருவர் எழுதிய கட்டுரையை தமது கட்டுரை என நெல்லை பல்கலை இணையதளத்திலேயே தைரியமாக தகிடுதித்தம் செய்தவரும் பின்னர் அசிங்கப்பட்டு இன்னமும் அந்த பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர் என உங்களுக்கு தெரியுமா..நீங்கள் ராமகிருஷ்ணன் என குறிப்பிட்டது த.மு.எ.ச., கிருஷியைத்தானே..அப்படியானால் அவரை பார்த்தது பரணி ஓட்டல் முன்பு அல்ல நிச்சயமாக ஜானகிராம் ஓட்டல் முன்புதான்

நன்றி

ச. ராமானுசம் சொன்னது…
on 

தாமிரபரணி தண்ணீர் அதிகம் குடிச்சா இப்படித்தான் அதிகம் பேச தோன்றும்

Anbudan,
www.nellairamanujam.blogspot.com

கருத்துரையிடுக