Google - சில டிப்ஸ் ....
(நிறைய பேருக்கு இது தெரிந்திருக்கும்... இருந்தாலும் இது தெரியாதவர்களுக்காக...)
Search Tips :
இப்போ அப்துல் கலாம் பற்றி ஏதாவது தேட வேண்டியது இருக்கு என்று வைத்துக்கொள்வோம் ... சாதரணமாக நீங்கள் செய்வது ABDUL KALAM என்று கொடுத்து தேடுவீர்கள். இப்படி கொடுத்தால் 1,030,000 பக்கங்கள் ரிசல்ட் ஆக வரும். கொஞ்சம் யோசித்து பாருங்கள். உங்களுக்கு தேவையான தகவலை பெற நீங்கள் 1,030,000 பக்கங்களை பார்க்க வேண்டும். ஏன் இப்படி..?
ABDUL KALAM என்று கொடுத்தால் கூகிள் யாஹூ எல்லாமே ABDUL என்றும் KALAM என்றும் இருக்கும் எல்ல பக்கங்களையுமே காட்டும். அதாவது அப்துல் காதர் , அப்துல் மாலிக் , அப்துல் முதலேப் இப்படி எல்ல பெயர்களையுமே காட்டும். அதே போல் முஹம்மது கலாம் ,.... இப்படி கலாம் என்ற பெயரையும் காட்டும். அதனால் நமக்கு தேவையான தகவல் கூட இப்படி தேவை இல்லா தகவல்களும் வரும்.
இதை சரி செய்ய ... அல்லது சரியை தேட என்ன செய்யலாம்.....
இதையே டபுள் கோட் உள்ளே கொடுத்து பாருங்கள் அதாவது இப்படி... " ABDUL KALAM"
இப்போ 959,000 பக்கங்கள் மட்டுமே காட்டும். இதையே "president abdul kalam" என்று கொடுங்கள் .. வெறும் 25,800 பக்கங்கள் மட்டுமே காட்டும்...
இதையே இன்னும் குறிப்பாக உங்களுக்கு அவரோட வாழ்க்கை சரித்திரம்தான் வேணும் என்றால் "president abdul kalam biography" என்று கொடுத்து பாருங்கள்....வெறும் 479 பக்கங்களிலே உங்களுடைய தேவை நிறைவேறிவிடும்....
.............தொடரும் ............
இதுபோல இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கு... கொடுக்கலாமா? அல்லது எல்லாருக்கும் தெரியுமா?... தொடரலாமா?....