எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-2 (விடையை சரி பார்த்தல்)

போன பதிவில் எப்படி பெருக்குவது என்று பார்த்தோம்.  இப்போ நாம் செய்து முடித்த கணக்கு சரிதானா என்பதை சுலபமா எப்படி சரி பார்ப்பது என்பதை பார்க்க போகிறோம்.

eg.  12  x 14 = 168    இதை எப்படி சரி பார்ப்பது?…

இந்த கணக்கை மூன்று பகுதியாக பிரிக்க போகிறோம். 

1.அதாவது நம்ம கணக்கில் முதல் எண் 12. இப்போ இதை 1+2 என்று கூட்டிக்கொள்ள வேண்டும். அப்போ 3 விடை.

2. இப்போ இரண்டாவது எண். 14. அதையும் 1+4 = 5 என்று கூட்டிக் கொள்வோம்.

இப்போ முதலில் உள்ள விடையையும் இரண்டாவது உள்ள விடையையும் பெருக்கவும். 3 x 5 = 15 . இதுவும் இரண்டு இலக்கமாக வருவதல் இதையும் பக்கவாட்டில் கூட்டவும் ( 1 + 5 = 6)  இப்போ நம்ம விடை 6.

3. இப்போ நம்ம கணக்கின் மூன்றாவது பகுதி… 1 + 6 + 8 = 15 . விடை இரண்டு இலக்கமாக இருப்பதால் மீண்டும் 1 + 5 = 6

முதல் விடையும் இரண்டவது விடையும் ஒரே மாதிரி வந்தால் நம்ம கணக்கு சரி…………….

தொடரும்….

எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-1

இது சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து …  அது ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் படுத்தியிருக்கிறேன்.

image

இதை பெருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் இந்த இரண்டு எண்களையும் 10 ஆக்க என்ன வேண்டும் என்பதை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.  அப்படி கணக்கிட்டால் இப்படி வரும்.

image

இப்போழுது இந்த இரண்டில் ஏதாவது ஒரு எண்ணை குறுக்கே கழிக்கவும். (8-4=4 or 6-2=4)

image

அப்படி கழிக்கும் போது வரும் எந்தான் விடையின் முதல் எண்.  இனி கீழே உள்ள எண்களை பெருக்கி போட்டால் நமது விடை கிடைத்து விடும். அதாவது (2 X 4 =8)

image

இன்னொரு உதாரணம் பார்ப்போமா?

image

image

image

image

இதை பெருக்க எதற்கு இத்தனை சிரமம்.. வாய்பாடு தெரிந்தால் போதுமேன்னு நினைக்கிறீர்களா?… உங்களுக்கு விடை தொடர்கிறது…

இப்போ , இதை பெருக்க வேண்டும்…

image

இப்போ முதலில் 10 போட்ட இடத்தில் 100 போட்டால் போதும்.. உங்கள் விடை ரெடி.

image

தொடரும்….