சைத்தானை படைத்தது யார்?

நேத்து நான் என்னோட பையனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு கூட்டி கொண்டு வரும்போது அவனும் அவனோட நண்பனும் (இரண்டு பேருமே படிப்பது 3 ஆம் வகுப்பு) பேசிகிட்டது...

நிறைய பேசிகிட்டே வந்தாங்க.. திடீர்னு பேச்சு கடவுள் பக்கம் திரும்பிட்டது...

டேய் ... கடவுள் இருக்குறது உண்மையா?
இவன் பதில் சொல்லாம ..... அப்போ சைத்தான் இருப்பது உண்மையா?
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு... நீ அதுக்கு பதில் கேள்வி கேக்காதே..
ஆமாம். உண்மைதான். எப்படி தெரியும்?
எங்க அப்பா சொன்னாங்க...
எல்லாரையும் படைத்தது யார்?
கடவுள்தான்.
அப்போ? சைத்தானை படைத்தது யார்?
அதுவும் கடவுள் தான்.
ஏன்டா... அவர் சைத்தானை படைத்தார்... சைத்தானை மட்டும் அவர் படைக்கலைனால் இந்த உலகத்திலே எல்லாரும் நல்லவங்களாவே இருந்திருப்பங்கள்ள....
டேய்... என்னடா புரியாம பேசுறே..... இப்போ நமக்கு ஸ்கூலில் பாடம் சொல்லி கொடுக்குறாங்க... இங்கே எக்ஸாம் இல்லேன்னா நாம எல்லாம் படிப்போமா? மாட்டோம்ல ... அதே மாதிரித்தான் கடவுளும் நினைத்திருப்பாருன்னு நான் நினைக்கிறேன்... ஆனாலும் கடவுள் நீ சொல்ற மாதிரி அந்த சைத்தானை படிக்காமல் இருந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்....

இந்த ஆபரேஷன் -க்கு டீம் லீடர் யாராயிருக்கும்?

crane-tip1

crane-tip2

crane-tip3

crane-tip4

crane-tip5

crane-tip6

crane-tip7

crane-tip8

crane-tip9

Comments By விஜய்கோபால்சாமி

கண்டிப்பா சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிட்ட யாரோ ஒருத்தராத்தான் இருக்கனும்... சரியா?

By Vellai Nila :   இதைவிடவும் பக்காவான கமெண்ட் பண்ணமுடியுமான்னு தெரியலை.. நன்றி நண்பா..

அன்றும்... இன்றும்... என்றும்....

ஆத்தா செப்பு குடமெடுத்து
ஆத்துக்கு போனா தண்ணி கொண்டார சாயங்காலம் ஆவும்.....
இப்போ குழாயை திருப்புனா தண்ணி......

ஐயன் வண்டி கட்டி சந்தைக்கு போனா
மத்த நாள் ராவைக்குதான் வுட்டுக்கு வருவாரு....
இப்போ காலையில 5.30 வண்டியை பிடிச்சி போயிட்டு
ராவுல சாப்பிட வீட்ல இருக்காவ...

பஞ்சாயத்து ரேடியோல செய்தி கேக்க
தாத்தா சாயங்காலம் 4.00 மணிக்கே காத்து கிடப்பாவ ...
இப்போ உலக செய்தி எல்லாம் தாத்தாகிட்டேதான் கேக்கணும்...

எல்லாமே எல்லாமே .. மாறிட்டு ... ஆனா ... ஆனா...

கலாங்கரை குப்பன் மவனும் கீழ தெரு நாடார் மவளும்
காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டப்போ
அப்போ வந்த அதே சாதி கலவரம் இப்போவும்.......

மைக்ரோசாப்ட்-டும் திருநெல்வேலியும் பின்னே நானும்....

ரெண்டு வருசத்துக்கு முன்னால ஒரு இனிய மாலை பொழுதில் ராமகிருஷ்ணன் சாரை பரணி ஹோட்டல் முன்னால பார்த்தேன். சாரை பார்த்து பேசிகிட்டு இருந்தேன்... அப்போ பக்கத்திலே ஒரு நண்பர் நின்னுகிட்டு இருந்தார். சா

ரும் என்னோட வேலையை பத்தி கேட்டுகிட்டு இருந்தாங்க... நமக்குதான் யாராவது ஆள் கிடைத்தா போதுமே.... கம்ப்யூட்டரில் அப்படி பண்ணலாம் இப்படி பண்ணலாம்னு ரொம்ப பேசிகிட்டே இருந்தேன்... பக்கத்தில் இருந்தவரும் அமைதியா கேட்டுகிட்டே இருந்தார். அன்னைக்கு நான் ஏதோ சாதிச்சிட்ட மாதிரி சார்கிட்டே ஒரு 1 மணி நேரம் பேசிகிட்டு இருந்தேன். எல்லாம் கம்ப்யூட்டர் பத்திதான் .

அவ்வளவு நேரம் பேசி முடிச்சிட்டு சார்ட்ட
"இது யார் சார் னு கேட்டதுதான் தாமதம்.."
இவரை தெரியாதா? இவர்தான் மகேஷ்.. - சார்
இல்லையே ... தெரியாதே... சொல்லவும்
என்னா தம்பி, கம்ப்யூட்டர் துறையில் இருக்கீங்க? நம்ம ஆள்களை தெரிந்து வைத்து கொள்ள வேண்டாமா?... இவர் உங்க துறையில் நிறையா சாதனை செய்திருக்கிறார்.. நம்ம நெல்லையை சேர்ந்தவர்.... அதான் மைக்ரோசாப்ட் கம்பனிக்கு கூட ஏதோ ப்ரோக்ரம்லாம் பண்ணி கொடுத்திருக்கிறார்...
என்னது மைக்ரோசாப்ட் - க்கா...
ஆஹா அதிகமா பேசிட்டோமோன்னு அப்போதான் தோணிச்சு ....
அதான் சொல்வாங்க ... "நிறை குடம் தழும்பாது.... அறை குறைதான் அதிகமா அலம்பும் புலம்பும்னு .."

2006071416510101
அந்த தமிழனை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன்..

கிளிக் ஹியர் :

ஒரு ரூபாய்க்கு உலகத்தில் எங்கிருந்தும் இந்தியாவுக்கு பேச ... (VOIP)

ஒரு ரூபாய்க்கு உலகத்தில் எங்கிருந்தும் இந்தியாவுக்கு பேச ... (VOIP)

வெளிநாட்டில் இருப்பவங்க ரொம்ப செலவழிப்பது ஊருக்கு போன் பேசத்தான். இந்த சைட் மூலமா பேசினால் ஒரு ரூபாய் தான் வரும்.. சவுண்ட் குவாலிட்டியும் நல்லா இருக்கு.

www.freecall.com

You can pay by Credit card ....

போகிற போக்கில்

போகிற போக்கில் .... நம்ம பசங்க போகிற போக்கில் அடிச்சி விட்டுட்டு போற சில சின்ன சின்ன ஜோக்ஸ்.....

Joke Number 1:
பசங்க எல்லாரும் சேர்ந்து குற்றாலத்திற்கு போயிருந்தோம்... கல்யாணி (கல்யாண சுந்தரம்) ஒரு பிளாட்பாரம் கடையில போய்
"தாத்தா ... வாழைபழம் வேணும்.... எவ்ளோ?"
ஒரு பழம் 50 பைசா தம்பி......
என்ன தாத்தா ... இம்பூட்டு சொல்றீங்க? ரூவாய்க்கு ரெண்டுன்னு .. எங்க ஊரில் சிரளியுது.... நீங்க யானை விலை சொல்றீங்க?....
அப்போ அவர் அவனை பார்த்த பார்வையை பாக்கனுமே?....

Joke Number 2:
எட்டாங்கிளாஸ் படிச்சிகிட்டு இருக்கும்போது.... கேம்ஸ் கிளாஸ்.... எங்க P.T. வாத்தியாருக்கு எப்பவுமே ஒலிம்பிக்ஸ் ட்ரைனிங் கொடுக்கிறோம்னு நினைப்பு.... அன்னைக்கு ரன்னிங் ரேஸ் காக சொல்லி கொடுத்துகிட்டு இருந்தார்.
எல்லாரும் வருசையா நில்லுங்க.... "
On Your Mark "
இப்போ மெதுவா வலது காலை முன்னால ஒரு ஸ்டெப் வைச்சி உக்காருங்க.... எல்லாரும் உக்காந்தோம்...
" Get Ready , Steady "
இப்போ மெதுவா தலையை மேலே தூக்கி ஒரு 3 மீட்டர் தூரம் பாருங்க... நான் "Go" சொன்னதும் ஓட ஆரம்பித்து விடலாம்னு..
சொல்லிக்கிட்டு இருக்கும்போதே பீட்டர் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சான். வாத்தியாருக்கு வந்தது கோவம்.
ஏன்டா ... ஏன்டா... ஏன் சிரிக்கிற ... கேக்க கேக்க .. இன்னும் அதிகமா சிரிச்சிகிட்டு இருந்தான். அவர் இன்னும் கோவப்பட்டு இப்போ சிரிக்கிறதை நிப்பாட்ட போறியா..இல்லையான்னு கத்தவும் நிறுத்தினான்....

அப்புறம் அவர் ஏன்டா சிரிச்சே.... இல்லை சார்... "Get Ready, Steady" சொன்னதும் மெதுவா தலையை தூக்கி 3 மீட்டர் தூரம் பார்க்க சொன்னேங்கள்ள... இந்த சுப்பையா 3.8 மீட்டர் தூரம் பார்த்துட்டான் சார்...

இன்னைக்கும் இதை எழுதும்போதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் தான் எழுதுகிறேன்...

Joke Number 3.
கட்டை ராதா.. எங்க கூட ரெண்டு ராதாகிருஷ்ணன் படிச்சாங்க.. அதனால் ஒருத்தன் பெயர் கட்டை ராதா..இன்னொருத்தன் நெட்டை ராதா... கட்டை ராதா ரொம்ப ஜாலியான பேர்வழி... ஆனால் ரொம்ப பொறுப்பானவன்.
இப்படித்தான் ஒரு ஞாயிற்றுகிழமை காலையில் அவனோட அம்மா "டேய் ராதா ரெண்டு தேங்கா சில்லு வாங்கிட்டு வாடான்னு 80 பைசா கொடுத்திருக்காங்க.... இவனும் தேங்கா வாங்க பஸ்ஸ்டாண்டிற்கு வரவும் அங்கே என்னோட இன்னொரு நண்பன் திருநெல்வேலிக்கு 10.30 மார்னிங் ஷோ வுக்கு கிளம்பி வந்திருக்கான்.
அவன் இவன்ட்டே மாப்ஸ்.. படத்துக்கு போறேன் வரியா... ன்னு கேக்கவும் தலைவர் எஸ்கேப்.... படத்துக்கு போயாச்சி... திருநெல்வேலி வரை வந்துட்டு ஒரு படத்தோட போகவா... மதியம் 2.30 நூன் ஷோவும் பார்த்துட்டு தலைவர் வீட்டுக்கு போயிருக்கார்...எப்போ ...? ராத்திரி 7.30 மணிக்கு....ராத்திரி வீட்டுக்கு போனவன் சும்மா இருந்த்திருந்தால் கூட அவங்க அம்மாவுக்கு கோவம் வந்திருக்காது... நேரா அவங்க அம்மாகிட்டே போய் ... "அம்மா இந்த தேங்கா சில்லுன்னு " கொடுத்திருக்கான்... அன்னைக்கு அவனுக்கு விழுந்த ஏச்சுக்கு ஈடு இணையே கிடையாது...