உங்களுக்கு இந்தியாவின் பிரதமராகும் தகுதியிருக்கா? Test Here.

டெஸ்ட் - 1
இங்கே கீழே இருக்கும் படங்களை முதலில் பார்க்கவும் ....

1
பாவம் ... யாராவது ஹெல்ப் பண்ணுங்க...
2
Microsoft - ல தயாரிச்ச வாட்ச்
லைட்-ஆ சிரிச்சீங்க தானே.....? Sorry you are பிரதமராகும் தகுதி இல்லை.... eliminated... உங்களுக்கு இந்தியாவின்
டெஸ்ட் - 2  
cubebike2

இவனுக்கு அவங்க அப்பாகிட்டே சொல்லி இப்போதான் சைக்கிள் வாங்கி கொடுத்தேன்... இன்னும் ஏன் அழுவுறான்.???  (சே ....சே ... இந்த காலத்து பயன்களை புரிஞ்சிகிடவே முடியலைப்பா....)

 

   
   
   
cubebike

ஆஹா........ அவசரப்பட்டுடோமோ?.. (வடிவேலு ஸ்டைல்ல படிக்கவும்.....ப்ளீஸ்...)

சிரிச்சீங்க தானே.....?                 Sorry you are பிரதமராகும் தகுதி இல்லை.... eliminated... உங்களுக்கு இந்தியாவின்
   
டெஸ்ட் - 3  
31 இன்னைக்கு எங்க கம்பெனி டெலிபோன் ஆப்ரேட்டருக்கு வேலை பார்க்கிற மூட் இல்லை போல......
speed-limit-3

வெளிநாட்டிலேயே ரோடு இப்படியிருந்தால் இந்தியாவில் கேக்கவா வேணும்?

speed-limit-2 அடங்கொக்கா மக்கா... ரூம் போட்டு யோசிப்பாணுவ போல ......
funny-picture-photo-child-toilet-massdistraction-pic

ஒண்ணும் இல்லை .. சார் அவசரமா பாத்ரூம் போறேன்னு  வந்தாரு... ரொம்ப நேரமா ஆளைக் காணோமேன்னு உள்ளே வந்து பார்த்தா.....

   

narasimha_rao

இன்னும் உங்க மூஞ்சி இப்படித்தான் இருக்கா?

Yes.. Yes... You have all the ability to be our next Indian prime minister....

படங்கள் உதவி: www.jokesduniya.com & Google Image Search

Note :  இந்த பதிவு சும்மா ... டைம் பாஸ்சுக்கு தான்.... யாரையும் தாக்கனும் என்ற எண்ணம் துளியும் இல்லை...

படிப்புல்லாம் வேண்டாம்..... வேண்டவே வேண்டாம்.......

ஏலேய்ய்... நாளைக்கு எல்லாரும் நல்ல டிரெஸ்ஸ போட்டுட்டு வாங்கடா... நம்ம கம்பெனிய படம் புடிக்க B.B.C யிலேருந்து வராங்கடா ... ஏலேய்ய் அதுவொண்ணும் சாதரண டிவி இல்லை. உலகம் பூராவும் தெரியகூடியது .. என்று மொதலாளி சொன்னதும் அந்த சின்ன வெடி பட்டரை அல்லோலகல்லோல பட்டது.

சிவா , நீ என்ன ட்ரெஸ் போடுவேடா?

நான் என்னத்தை , என் போன வருஷ தீவாளி டிரஸ் தான் போடணும். இந்த வருஷம்தான் புதுசு எடுக்கலையே ...

வித விதமான ஆலோசனைகள்.
எல்லார் மனதிலும் நாம T.V. யில வரப்போரோம்ங்க்ற சந்தோசம்.

விடிந்தது...... பெரிய கேரவன் வேன் வந்து நின்றது.. எல்லா ஆரம்ப வேலைகளையும் முடித்து அந்த பெண் பேட்டி எடுக்க ஆயத்தமானாள்.

தம்பி... உன்னோட பெயர் என்ன ?
ராஜா ...
இந்த வேலை உனக்கு பிடிச்சிருக்கா?
ஆமாம். படிக்கணும்னு ஆசை இல்லையா?
ரொம்ப இருக்குங்க... ஆனா குடும்ப சூழல் அப்படி... அதானால்தான் வேலைக்கு வந்துட்டேன். என் அக்கா கூட இங்கேதான் வேலை பார்க்கிறாள்.
அப்பா என்ன செய்கிறார் ...
அப்பா சும்மாதான் இருக்கிறார் .. எங்க சம்பளம் தான் குடும்பத்துக்கு....

அடுத்தது ...அடுத்தது ... எல்லாரிடமும் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள். எல்லார் மனதிலும் படிக்கணும் படிக்கணும் என்றே தான் இருந்தது,,, எல்லாருக்கும் ஒரு கனவு.. படிக்க முடிந்தால் டாக்டர் ஆகணும். எஞ்சினியர் ஆகனும்னு...

அடுத்து ..
உன்னோட பெயர் என்ன தம்பி ?
சூர்யா...

Soorya 
படம் உதவி : Google Image Search


ரொம்ப நல்ல பெயர் ... ஒரு நடிகர் இருக்கருல்ல அந்த பெயரில் ஒரு நடிகர் கூட இருக்கார் தெரியுமா?
ஆமாம். ஆனா அவர் நடிக்க வர்றதுக்கு முன்னாலேயே என் பேர் சூர்யாதான்..
சரி. எல்லாருக்கும் படிக்கனும்னு ரொம்ப ஆசை இருக்கு... உனக்கு படிச்சி என்னவா ஆக ஆசை?
இல்லை. எனக்கு படிக்க ஆசை இல்லை.
என்னது... படிக்க ஆசை இல்லையா? தம்பி தப்பு. ரொம்ப தப்பு. படிக்க முடியலைங்கறது சூழல். ஆனா மனசுக்குள்ள படிக்கணும் என்ற எண்ணம் இருந்த்கிட்டே இருக்கணும். அப்போதான் எப்போ சான்ஸ் கிடைத்தாலும் படிக்கனும்னு தோணும்.

அதெல்லாம் எனக்கு தெரியாது... எனக்கு படிக்க விருப்பமில்லை...

என்ன நீ.... நான் சொல்றேன். கொஞ்சம் கூட திருந்த மாட்டீயா? படிக்கனும் என்ற ஆசை மனதுக்குள் கொண்டுவரனும். அப்போதான் முன்னேற முடியும்...
அவளுக்கு கொஞ்சம் கோவம் வந்தது. இந்த சின்ன வயசில இப்படி அழுத்தமா இருக்கானே என்று...

அவனுக்கும் அதே கோவம் வந்தது.... கோவத்தோட மறுபடியும் சொன்னான் ... இல்லைங்க .. எனக்கு படிக்க புடிக்கலை.. இங்க வேலை பார்த்தா போதும்.. இங்க கிடைக்கிற அஞ்சோ , பத்தோ போதும்...

என்னப்பா நீ .. இப்படி சொல்றே... நீ சின்ன பையன் .. இன்னும் எவ்வளவோ இருக்கு வாழ்க்கையில ...

சொல்லவும் அவன் வெடித்தான்.... ..... .... ஆமாங்க ... இருக்கு.... இருக்கு....

அவளுக்கு பேச தோணலை.... அவனை கோவமாய் பார்த்தாள்...

அந்த பார்வை .... இவனை ஏதோ செய்ய .. மீண்டும் வெடித்தான்..

ஆமாங்க... இருக்கு.... இன்னும் எவ்வளவோ இருக்கு... அஞ்சு ரூவாக்கும் பத்து ரூவாக்கும் உங்க அம்மா செருப்பால ... வாரியலால் அடி வாங்கறதை பாத்திருக்கீங்களா? நான் பாத்திருக்கேன்.. தினமும் பார்த்துகிட்டு இருக்கேன்... அந்த அஞ்சு ரூவாவோ பத்து ரூவாவோ சாயங்கலம் கொண்டுபோய் கொடுத்து எங்க அம்மாவை அப்பன் கிட்டேயிருந்து காப்பாத்தினா போதும்ங்க ... படிப்புல்லாம் வேண்டாம்...வேண்டாம் ... வேண்டவே வேண்டாம்.......

1995, Bsc. Result Day And 2008,Today

1995, Bsc. Result Day

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பஸ் பிடித்து Science Center Stop-இல் வந்து இறங்கும் போது எனக்கு B.Sc. ரிசல்ட் பார்க்க போற எந்த பதட்டமும் இல்லை.

பேருந்திலிருந்து இறங்கும் போது  குலாம் (என் தோழன்) பார்த்தேன் ... என்னை பார்த்ததும் கண்கள் சிவக்க அழுதுவிட்டான் ... என்ன ஆச்சு  குலாம் பாய் ... விடுங்க ... எக்ஸாம் result தானே ... வாழ்க்கையோட result இல்லையே.... விடுங்க விடுங்க.... சொல்லியும் விடாமல் அழுதுகொண்டிருந்தான் ...

குலாம் ... என்னோட விடுதியில் ரூம் மேட் ... ரொம்ப நல்லா படிக்ககுடியவன். அவனே அழுதுகிட்டு இருக்கான்... அப்போ நான் ... எனக்கு நினைக்கையிலே கொஞ்சம் பயம் வந்தது... சரி .. விடுங்க ... குலாம் ... எடுத்து எழுதிடலாம்....

எந்த பேப்பர் போயிருக்கு? கேக்கவும் சிஸ்டம் அனலிசிஸ் ... சொல்லி மீண்டும் கண்கள் கலங்க நின்றிருந்தான் ...

ஏன் உங்க வீட்டில் சத்தம் போடுவாங்களா? - நான்

இல்லை சூர்யா ... நான் எல்லாம் பாஸ் ஆயிட்டேன்...வழக்கம்போல அதே 85-90%. உனக்குதான் சிஸ்டம் அனலிசிஸ் போயிருக்கு.... - குலாம்

என்னது..... எனக்கு ஒரே ஒரு பேப்பர்தான் போயிருக்கா? எனக்கு ரொம்ப சந்தோசம் .... 14 paper எழுதி ஒன்னே ஒன்னுதான் போயிருக்கா..... என்ன குலாம் பாய்.... நான் பெயில் ஆனதுக்கா அழுறீங்க? .... குலாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... நான் அந்த பேப்பர் எப்படியும் அடுத்த செமஸ்டர்ல எடுத்துருவேன்னு சொல்லி சமாதனப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்....

2008,Today

இப்போ நான் Saudi Arabia - வில் ஒரு கம்பென்யில் System Analysist .

கரெக்ட் .. நீங்க மனசுக்குள்ளே நினைக்கிறது எனக்கு கேக்குது.....

Yes.குலாம் என்ன பண்றாருன்னு தானே கேக்குறீங்க?

அவர் கடையநல்லூரில் மரக்கடை வைத்திருக்கிறார்.

13 gigapixel camara - வில் எடுத்த படம் பார்ப்போமா?

 

13 gigapixel camara - வில் எடுத்த படம் பார்ப்போமா? இங்கே கிளிக்கவும்

http://www.harlem-13-gigapixels.com/

ஹை கூ ...

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதானால்தானோ என்னவோ மந்திரங்களை போலவே தந்தையின் சொல்லும் புரியாமலே போனது....

ஆங்கிலம் கத்துக்கலாம் வாங்க .....

ஆங்கிலம் கத்துக்கலாம் வாங்க .... நேத்து இந்த ப்ளாக் பார்த்தேன் ... ரொம்ப ஆர்வமாகவும் ரொம்ப பயனுள்ளதாவும் இருந்தது ... யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ....


ஆங்கிலத்தை நம்ம தமிழ் மொழி மூலமாக படிக்க ......


அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது ......


ரொம்ப நாளைக்கு முன்னால என்னோட நண்பன் சொன்ன ஒரு சம்பவம் ... 
நண்பன் ரொம்ப முற்போக்கு சிந்தனைவாதி ... எல்லாத்தையுமே மூளையால் யோசிக்காமல் இதயத்தால் யோசிப்பவன் .... யானைக்கும் அடி சருக்கும்தனே... அப்படித்தான் சறுக்கியது...  

திருநெல்வேலியில் இருந்து மதுரையை நோக்கிய பயணம் ... இரவு 9.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கிளம்பியாச்சு... அந்த பேருந்து நாகர்கோவிலில் இருந்து சென்னையை நோக்கி போய் கொண்டிருந்தது... பேருந்தில் ஏறியாச்சு ... அருகில் ஒரு பெரியவர்... பார்த்ததுமே விவசாயி என்பது தெரிந்தது. சட்டை இல்லாமல் பழுப்பு கலரில் ஆன வெள்ளை வேஷ்டி... நாகர்கோவிலில் இருந்து வர்றார் போல... தூக்க கலக்கம் நல்லாவே தெரிந்தது.... அவருக்கு அடுத்த சீட் என்னோட நண்பனுக்கு... 

பேருந்து நிலையத்தை தாண்டியதுதான் தாமதம்... பெரியவர் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டார்.... தூக்கம் ரொம்ப கூடி ...கூடி ... நண்பர் மேலே மெதுவா சாய ஆரம்பித்துவிட்டார்... இவன் கொஞ்சம் பொறுத்து பார்த்து ... பொறுத்து பார்த்து ... மெதுவா அவர் தலையை தள்ளி விட்டிருக்கான்... மெதுவா முழிச்சி பார்த்துதுட்டு மீண்டும் அதே தூக்கம்.... ஒரு அரைமணி நேரம் பார்த்துட்டு ... இது தேறாது ,,, ரொம்ப கஷ்டமா போகவும் "தாத்தா ...தாத்தா... கொஞ்சம் நேரா உக்காருங்க ... விட்டா மடியில படுத்துருவீங்க போல இருக்கே ".. என்று எரிச்சலாய் சொல்ல அவர் தம்பி மன்னிசிக்கப்பா ... இப்போதான் வயகாட்டிலே இருந்து வந்தேன் ... என் மவ பெரிவளுக்கு உடம்புக்கு முடியலை .. இப்போ தான் போன்வந்தது..அதன் பதறி அடிச்சிகிட்டு ஓடிவந்தேன் ... மன்னிசிக்கப்பா ... 
சரி ... சரி... பரவாஇல்லை ... இனிமே சாயாமல் நேரா தூங்குங்க ... நண்பன் ஆனால் அவர் துங்க வில்லை... கண்களில் என்னலாமோ சிந்தனை தெரிந்தது ... அனாலும் இவனுக்கு ஒன்னும் தோணலை ...  

நேரம் ஆக ஆக நண்பனுக்கு தூக்கம் வந்திருக்கு ... தலைவரும் நல்லா தூங்கிட்டாரு.. நேரம் நேரம் ஆக ஆக ... இவன் கொஞ்சம் கொஞ்சமா அவர் மேலே சாய ஆரம்பிச்சிருக்கான் .. கொஞ்சம் உணர்வு வர ... அவர்ட்ட சாரின்னு சொல்லிடு மீண்டும் தூங்கியிருக்கான் ... மீண்டும் மீண்டும் தூக்கம் வந்து தூங்க கொஞ்ச நேரத்தில் அவர் மெதுவா இவன் தலையை தூக்குவது தெரிந்தது. முழித்தும் முழிக்க முடியாமலும் இருக்கும்போது அவர் மெதுவா அவர் தலையில் இருந்த துண்டை அவிழ்த்து செம்மாடு(துண்டை ரவுண்டா சுத்தி தலைக்கு வைத்து படுக்க தலையணை மாதிரி இருக்கும் ) கட்டி நெஞ்சில் வைத்து அவன் தலையை அதில் வைத்திருக்கிறார்.அப்போதான் அவனுக்கே தெரிந்தது அவன் படுதிடுந்த அந்த நெஞ்சில் நெஞ்சு எலும்பு தூக்கி கொண்டிருந்தது ... அவனுக்கு படுக்க இடைஞ்சலாய் இருந்தது .... அதற்கு அப்புறம் அவன் தூங்கவில்லை ... ஆனால் அந்த நெஞ்சில் இருந்து தலையை எடுக்கவும் இல்லை...  

அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாய் இருந்தது ......

ஏழங்களாஸ் டீச்சர்...

நினைவு துகள்களுக்குள்
ஒரு பயணம்...
மறக்காத .. இல்லை...இல்லை .. மறக்கமுடியாத முகமுமாய்
மறந்து போன பெயருமாய்
என் ஏழங்களாஸ் டீச்சர்...

ஒரு நாளும் ஒரு நொடியும்
எங்களை தொடாத டீச்சர் கை பிரம்பு....

உச்சி வெயிலிலும் உறங்காமல் நிழல் தந்த வேங்கை மரநிழலில்
சொல்லி தந்த வாழ்க்கை பாடம்....

புரியாத வயசு...அறியாத வயசு....
ஆனாலும் 
"டேய்...டீச்சர்...நம்மளையெல்லாம் நல்லா
படிக்க வைப்பதற்காய்...கல்யாணமே
பண்ணிக்கலைடா...." - தோழன் சொன்னது
இதயம் தொட்டு
கண் வழியே நீராய் நின்றது....

அழகில்லாத முகமுமாய்...
அழகான இதயமுமாய்....நீங்கள்....

எதையுமே....எதையுமே...
மறக்க முடியாது....டீச்சர்....மறக்க முடியாது....
என்றுதான் எண்ணியிருந்தேன்... ஆனால்...

வாழ்க்கை எல்லாத்தையும் மறக்கடித்தது...
மனதை மழுங்கடித்தது...நேற்று வரை...

"டேய்... நம்ம ஏழங்களாஸ் டீச்சர்
கேன்ஸர்ல இற்ந்துட்டாங்களாம்....".....

"சில்க்"-பாய்


ஆண்டாண்டு காலமாய் எண்ணெய் தேய்க்காத பரட்டை வெள்ளை முடி...
கொஞ்சம் குள்ளமான உருவம்....
வாய் நிறைய சிரிப்பு...
அழுக்கேறிய உடை....
கையில் தண்ணீர் கேத்தல்....
--- இதுதான் "சில்க்"-பாயின் அடையாளம்.

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் கல்லூரியின் விடுதியில் சமையல் அறையிலேயே வாழ்க்கை மொத்தத்தையும் தொலைத்த அந்த மனிதனின் அடையாளம்.

இளமை கொழுப்பில் நாங்கள் செய்த மொத்த அராஜகத்திற்க்கும் சிரிப்பை மட்டுமே பதிலாய் தந்த அந்த மனிதனை இன்னும் நான் மறக்காமல் இருப்பது எனக்கே கொஞ்சம் பெருமையாய் இருக்கிறது. அதிகம் பேசியதில்லை அவர். ஆனால் பற்றிய செய்திகள் அதிகம் பேசும். எனக்குத் தெரிந்து யாரிடமும் கோபப்பட்டதில்லை. நான் கூட நினைப்பதுண்டு இறைவன் இவருக்கு கோபம் என்ற உணர்வையே கொடுக்கவில்லையோ ..என்று...

மதிய உண்வு இடைவேளையின் போது உணவு வாயை எட்டுதோ இல்லையோ அனைவர் வாயிலும் சில்க்...சில்க்...என்று ஆயிரம் முறை வரும். "சில்க்..தண்ணி....சில்க்...பருப்புக்கு நெய் இன்னும் வரலை...இது போக காது கூச்சச் செய்யும் கேலிகள்...."அப்போ ஒண்ணும் தோணலை...ஆனா இப்போ கஷ்டமா இருக்கு. 

இது சகஜம்தானே...தமிழ்நாடு முழுவதும் இப்படி ஆயிரக்கணக்கான பேர் ஆயிரக்காண பெயர்களில் இருக்கிறார்களே...இவரிடம் அப்படி என்ன மேன்மை...என்ற உங்கள் குரல் எனக்கும் கேட்கிறது...உங்களுக்கு என் பதில்....

"ஆம்....இருக்கிறது...அந்த 40+ வயதிலும் அவருக்கு கல்யாணம் ஆகவில்லை.அவர் விரும்பவில்லை. தன்னுடைய தங்கைகளுக்கு கல்யாணம் செய்துவிட்டுத்தான் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்து அதை நிறைவேற்றியும் காட்டினார். ஆனால் பாவம் அவர் தங்கைகளுக்கு மணமுடிக்கும்போது இவர் வயது 40 தாண்டியிருந்தது..."...

இன்னமும் என் மனதின் தீராத ஒரே வலி...கிட்டத்தட்ட 2 வருடம் விடுதியில் இருந்தேன்..அதாவது கிட்டத்தட்ட 730 நாள்கள். அதாவது கிட்டத்தட்ட 17520 மணி நேரம்..அதாவது கிட்டத்தட்ட 1051200 நிமிடங்கள்...அதாவது கிட்டத்தட்ட 63072000 நொடிகள்... இதில் ஒரே ஒரு நொடி கூட அவரிடம் அன்பாய் பேசியதில்லை. அவர் தியாகத்தை பாராட்டியதில்லை...அட...போங்க... அவரோட பெயர் கேட்டதில்லை.....என்ன ஜென்மங்க நானெல்லாம்...என்ன ஜென்மம்....